Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குநரின் தாயார் மரணம்...சிம்பு வெளியிட்ட ஆறுதல் கடிதம்....

Advertiesment
இயக்குநரின் தாயார் மரணம்...சிம்பு வெளியிட்ட ஆறுதல் கடிதம்....
, திங்கள், 10 மே 2021 (21:43 IST)
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவையொட்டி அவருக்கு ஆறுதல் தெரிவித்து நடிகர் சிம்பு ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இவரது தம்பி கங்கை அமரன்.  இவர் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.  இவரது மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். எனவே திரையுலகப் பிரபலங்கள் கங்கை அமரன் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை அமரன் – மணிமேகலை தம்பதியரின் மகன்கள், இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன். இவர்களுக்கு சிம்பு ஒரு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அம்மா மீது அன்பு கொண்ட உங்களுகு நான் எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. அம்மாவின் மீது அன்பு கொண்ட உங்களுக்கு இதைக்கடப்பது எவ்வளவு கடிதம் என்பதை அறிவேன்.  அம்மாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. அப்பாவுக்கும் குடும்பத்திற்கும் உங்கள் அனைவரும் நான் இழப்பைப் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாட்டு படத்தை, சுரேஷ் காமாட்சி  இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை அவமானப்படுத்தினார்கள் -பிரபல நடிகை தகவல்