Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் திரையில் இப்படிதான் இருப்பாரு.... மனம் திறந்த இமான் - வீடியோ!

Webdunia
புதன், 27 மே 2020 (19:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், டி இமான் இசை அமைக்கிறார்.

இப்படத்தின். முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைப்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட வேலைகள் முடிந்ததும் வருகிற  2021ல் பொங்கல் ஸ்பெஷலாக வெளியகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் இறுதி சுற்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.இம்மானிடம் அண்ணாத்த படத்தின் பாடல்கள் குறித்து கேட்டதற்கு, " ரொம்ப மாஸ் ஆக வந்திருக்கு.. 3 பாடல்களுக்கு உண்டான வேலைகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 பாடல்கள் உள்ளது அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என கூறி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருப்பதை உறுதி செய்தார். ஆரம்பகால ரஜினியை பார்த்து ரசித்து பிடித்ததால் அண்ணாத்த படத்தில் அந்த தலைவரை கொண்டு வந்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments