Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனிதா தற்கொலை குறித்து ட்வீட் போட்ட நடிகைக்கு நெட்டிசன்கள் பதிலடி

Advertiesment
அனிதா தற்கொலை குறித்து ட்வீட் போட்ட நடிகைக்கு நெட்டிசன்கள் பதிலடி
, சனி, 2 செப்டம்பர் 2017 (11:39 IST)
நீட் தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவிற்கு  பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், 'இறுதிச் சுற்று' நடிகை ரித்திகா சிங் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இதனால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். 'மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்' என அனிதா தற்கொலைக்கு சம்பந்தமே இல்லாமல் ட்விட்டியிருந்தார் ரித்திகா சிங்.

webdunia
 
அதை பார்த்தவர்கள் "முதலில் எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்" என தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள் என  அவரை திட்டி ட்வீட் போட துவங்கிவிட்டனர். மேலும் இதுபற்றி விளக்கமளித்த ரித்திகா "எனக்கு எல்லாம் தெரியும். ஒரு உயிர்  போனது பற்றி பேசினேன்" என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிதா மரணம் ; அதிகாரமும் சட்டமும் செய்த படுகொலை ; பொங்கும் சினிமா பிரபலங்கள்