Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனிதா மரணம்; அமெரிக்காவில் எதிரொலி: ஆர்பாட்டங்களுக்கு திட்டம்!!

Advertiesment
அனிதா மரணம்; அமெரிக்காவில் எதிரொலி: ஆர்பாட்டங்களுக்கு திட்டம்!!
, சனி, 2 செப்டம்பர் 2017 (11:25 IST)
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பூதாகாரமாய் வெடித்துள்ளது.


 
 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில் அரசுகளே காரணம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யவும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், அனிதா மரணம் அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா, நியூ ஜெர்சி, டெட்ராய்ட், டல்லாஸ், செயிண்ட் லூயிஸ், நெவார்க்(டெலவர்) ஆகிய நகரங்களில் இன்று மெழுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. 
 
மேலும் ஆர்பாட்டங்களுக்கு திட்டம் தீட்டப்படுவதாகவும் உரிய அனுமதி கிடைத்ததும் அவை செயல்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிதா மரணம் எதிரொலி: பதற்றத்தில் தமிழகம்; வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்!