அஜித்தோடு மூன்றாவது முறையாக இணையும் அனிருத்!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (14:26 IST)
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்க உள்ள அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித் முழுக்க முழுக்க எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். முன்பு மங்காத்தா போன்ற படங்களில் அவரின் எதிர்மறைக் கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் அஜித்துக்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments