Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜவான் படத்தில் அனிருத் சம்பளம் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் தகவல்!

ஜவான் படத்தில் அனிருத் சம்பளம் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் தகவல்!
, செவ்வாய், 18 ஜூலை 2023 (14:09 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். இந்த படத்துக்காக அனிருத் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது இந்திய அளவில் ஒரு இசையமைப்பாளர் வாங்கும் அதிகபட்ச சம்பளமாகும்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்திய அளவில் இதுவரை அதிக சம்பளம் வாங்கி வந்த நிலையில் அவரின் சாதனையைத் தாண்டியுள்ளார் அனிருத். ஏ ஆர் ரஹ்மான் ஒரு படத்துக்கு இசையமைக்க 8 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''#ProjectK '': அமெரிக்காவில் பிரபாஸ் ரசிகர்கள் நடத்திய கார் பேரணி.. வைரல் வீடியோ