ஐபிஎல் திருவிழா சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. அதில் பெங்களூரு அணி அபார வெற்றியைப் பெற்றது. அதையடுத்து மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் நடக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் முதல் போட்டியின் போது கோலாகலமான இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த போட்டியின் போது இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் ஜெயிலர் படத்தின் ஹுக்கூம் உள்ளிட்ட பாடல்களைப் பாடினார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர் “ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலை உருவாக்கும் போதே இது ரஜினி சாருக்குப் பொருந்துவது போல தோனிக்கும் பொருந்தவேண்டும் என்றுதான் வரிகளை எழுத சொன்னேன். சென்ற ஆண்டு தோனி மைதானத்துக்குள் வரும்போது அந்த பாடலை போட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.