Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்தைக் கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்...

Webdunia
சனி, 5 மே 2018 (12:52 IST)
தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிருத்தைக் கழட்டிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில், பாதி படத்துக்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். நடிகர் – இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, இருவரும் பல வருடங்களாக நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். தனுஷ் – அனிருத் இடையில் பிரச்னை வந்தபோது கூட, தன்னை வளர்த்துவிட்ட தனுஷ் பக்கம் போகாமல் அனிருத்துடனே நின்றார் சிவகார்த்திகேயன்.
 
ஆனால், சிவகார்த்திகேயனின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அனிருத்தைக் கழட்டிவிடுவதாகவே அமைந்துள்ளன. கிராமத்துக் கதை என்றால் டி.இமானையும், நகரத்துக் கதை என்றால் அனிருத்தையும் இசையமைக்கச் சொல்வது சிவகார்த்திகேயனின் வழக்கம்.
 
ஆனால், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். ஆக, அனிருத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கழட்டிவிடுகிறார் என்கிறார்கள். அதற்கான காரணம் தான் என்னவென்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments