Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா பட நடிகருக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை !

Advertiesment
நயன்தாரா பட நடிகருக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி'  சிகிச்சை !
, வியாழன், 27 மே 2021 (18:37 IST)
பிரபல நடிகரும் இயக்குநருமான அனுராப் காஷ்யப்பிற்கு இன்று ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவைச் கிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுரக் காஷ்யப்,  நயன் தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானார்.

இவர் பாலிவுட்டில், பிளாக் பிரைடே,  தேவ் டி,  கேங்ஸ் ஆப் வசிப்பூர்,  மன்மர்ஸியான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது 'ஆடுகளம்' டாப்ஸி நடித்துவரும் டோபாரா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் புரெடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அனுராக் காஷ்யபிற்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, இவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்தக் குழாயில் அடைப்புஇருப்பது தெரியவந்தது. எனவே அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, தற்போது அனுராக் காஷயப் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்தபிறகு  வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் எனக் கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிந்தது தங்கம் விலை….இன்றைய தங்கம் விலை நிலவரம்