Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்புச்செழியன் ரொம்ப மரியாதையானவர்; தேவயானி ஓபன் டாக்!

Advertiesment
அன்புச்செழியன் ரொம்ப மரியாதையானவர்; தேவயானி ஓபன் டாக்!
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (17:27 IST)
அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் தமிழ் சினிமா துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பேட்டி கொடுத்தனர்.
சசிகுமாரின் கம்பெனி தயாரிப்பு நிர்வாகத்தை நிர்வகித்து வந்த அசோக் குமார் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அசோக் குமார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அன்புச்செழியன் ஒரு காலத்தில் நடிகை தேவயானியை பணத்திற்காக மிரட்டியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்  அன்புச்செழியன் பற்றி தேவயானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பைனான்ஸியர் அன்புச்செழியன் ரொம்ப  நல்லவர், ஸ்வீட்டானவர், மரியாதையானவர் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். நாங்கள் கொடுக்க வேண்டிய  பணத்தை சரியான நேரத்தில் அன்புவிடம் கொடுத்துவிட்டோம். என்னை பொறுத்த வரைக்கும் எப்ப அவர் ரொம்ப  மரியாதையுடன் ஸ்வீட்டாக பேசுவார் பழகுவார். நான் அவரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன். அவர் எங்களுக்கு எந்த  தொல்லையும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நன்றி: Fast Messenger
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினேகன் தொடங்கும் ‘மக்கள் நூலகம்’