நாங்கள் நிறைய ஜானர்களை விவாதித்தோம்… ஆனா கமல் சார் சொன்னது இதுதான் –அன்பறிவ் இயக்குனர்கள் பகிர்வு!

vinoth
வெள்ளி, 30 மே 2025 (14:43 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்'  படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து லைகா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் கமல்ஹாசனின் சம்பளம் மற்றும் பட்ஜெட் ஆகியவை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள அன்பறிவ் சகோதரர்கள் “இந்த படத்துக்காக நாங்கள் நிறைய ஜானர்கள் ஆலோசித்தோம். ஆனால் கமல் சார் எங்களிடம் ‘தம்பி நீங்க வாங்க.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டார்” எனக் கூறியுள்ளார். கமல்ஹாசனோடு இணைந்து அன்பறிவ் சகோதர்கள் இந்த படத்துக்கான திரைக்கதையை அமெரிக்கா சென்று எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments