அமெரிக்காவின் புகழ்பெற்ற சீரியலில் நடிக்கிறார் எமி ஜாக்சன்.
லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன், ‘மதராசப்பட்டினம்’ மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, சில தமிழ்ப் படங்களிலும், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் ‘2.0’ படம் ரிலீஸாகவுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினி ஹீரோவாக நடித்துள்ளார்.
அத்துடன், ‘குயின்’ ஹிந்திப் படத்தின் தென்னிந்திய மொழிகள் ரீமேக் நான்கிலும், முக்கிய வேடத்தில் எமி ஜாக்சன் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘சூப்பர் கேர்ள்’ சீரியலில் நடித்துள்ளார். சூப்பர் ஹீரோ, ஆக்ஷன் அட்வெஞ்சரான இந்த சீரியலின் மூன்றாவது பாகம் தற்போது ரிலீஸாக இருக்கிறது. அதில்தான் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.