Publish Date: Wed, 30 Aug 2017 (21:05 IST)
Updated Date: Wed, 30 Aug 2017 (21:07 IST)
சோனி தொலைக்காட்சி நிறுவனம் பெஹ்ரிதார் பியா கி என்ற ஹிந்தி சீரியலை ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் இந்த சீரியலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோனி தொலைக்காட்சி ஜிலை மாதம் 17 ஆம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலின் கதை தவறாக இருப்பதால் இதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதாவது, 9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை சுற்றி நகர்வதே சீரியலின் கதை.
இதை பார்க்கும் சிறுவர்கள் தங்கள் நிலைமாறக்கூடும் என்ற காரணத்தினால் இந்த சீரியல் மீது பல புகார்கள் எழுந்தது. இதனால் சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 10.30 மணிக்கு மாற்றினார்கள்.
ஆனாலும், சீரியலுக்கான எதிர்ப்புகள் குறையவில்லை. எனவே வேறு வழியின்றி அந்த சீயலை ஒளிபரப்புவதை சோனி தொலைக்காட்சி நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.