நடிகர் அமிதாப் பச்சன் இந்தியா முழுவதும் அறியப்படும் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன் இப்போது 80 வயதிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்திருந்த பான் மசாலா விளம்பர படத்துக்கு தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த விளம்பரத்தில் இருந்து விலகவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்தும் அந்த விளம்பரம் ஒளிபரப்பப் படுவதாக அமிதாப் பச்சன் கம்லா பசந்த் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.