Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான்..!

Advertiesment
தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான்..!

vinoth

, சனி, 15 மார்ச் 2025 (08:27 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். இந்நிலையில் அமீர்கான் தன்னுடன் தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் என்கிற நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களின் காதலால்தான் அமீர்கானின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினை  உருவாகி  விவாகரத்து வரை சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த திருமணச் செய்தியை பாத்திமா சனா மறுத்தார். அமீர்கானும் இதை மறுத்தார்.

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது அமீர்கான் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகை ரியா சக்ரோபோர்த்தியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பேசினார். அப்போது அவர் திருமண வாழ்க்கைக் குறித்து பேசும்போது “நான் இரண்டு முறை விவாகரத்துப் பெற்றவன். அதனால் என்னிடம் திருமண வாழ்க்கைக் குறித்து அறிவுரைக் கேட்காதீர்கள். எல்லோருக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. என் முன்னாள் மனைவிகளோடு நான் இன்னும் நல்ல உறவில்தான் உள்ளேன். நாங்கள் ஒரு குடும்பம் போல இன்றும் பயணிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளின் போது தன்னுடைய காதலி கௌரி ஸ்ப்ராட் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். கௌரி, அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான ‘அமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கௌரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். இருவரும் கடந்த 18 மாதங்களாக ‘டேட்’ செய்து வருவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பராசக்தி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்..!