Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் சார் என் படமெல்லாம் பாத்திருக்காரான்னு தெரில… ஆனா அமரன் பாத்தே ஆகணும் – சிவகார்த்திகேயன் ஜாலி கமெண்ட்!

கமல் சார் என் படமெல்லாம் பாத்திருக்காரான்னு தெரில… ஆனா அமரன் பாத்தே ஆகணும் – சிவகார்த்திகேயன் ஜாலி கமெண்ட்!

vinoth

, வியாழன், 10 அக்டோபர் 2024 (10:07 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சிவகார்த்திகேயன் “கமல் சார் இதுவரை என் படம் எதாவது பாத்திருக்கிறாரா என்று என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமரன் படத்தின் தயாரிப்பாளராக அவர் இருப்பதால் இதை அவர் பார்த்துதான் ஆகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அருகில் இருந்த கமல்ஹாசன் “உங்க படம் பாத்திருக்கேன்” என அவரை தட்டிக் கொடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா பயோபிக் ஷூட்டிங் மீண்டும் தாமதமா?