பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற விசாரணைக் காவல் விதிக்கப்பட்டது.
உடனடியாக அவர் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க்கப்பட்டது. ஆனாலும் அவர் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு இன்று காலைதான் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீன் கிடைத்தாலும் அதற்கான விதிமுறைகள் முடிந்து அவர் ரிலீஸாவதற்குத் தாமதம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.