Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியில் கல்லா கட்டிய புஷ்பா… வரிசையாக டப் ஆகும் அல்லு அர்ஜுன் படங்கள்!

இந்தியில் கல்லா கட்டிய புஷ்பா… வரிசையாக டப் ஆகும் அல்லு அர்ஜுன் படங்கள்!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:54 IST)
அல்லு அர்ஜுனின் புஷ்பா இந்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இப்போது அவரின் அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் டப் ஆகி வெளியாக உள்ளது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தியில் இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அல்லு அர்ஜுனின் பழைய வெற்றி படங்கள் இப்போது இந்தியில் டப் ஆகி வருகின்றன. அதில் முதலாவது படமாக அலா வைகுந்தபுரம்லூ படத்தை இப்போது இந்தியில் டப் செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுடன் அக்கா விவாகரத்து; தனது டிபியை மாற்றிய சௌந்தர்யா!