Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாத்த வசூலை முந்திய அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி!

அண்ணாத்த வசூலை முந்திய அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி!
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (10:38 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான சூர்யவன்ஷி திரைப்படம் வசூல் ரீதியாக சாதனைப் படைத்துள்ளது.

அக்‌ஷய் குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக சூர்யவன்ஷி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில் முதல்நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுவரை அக்‌ஷய் குமார் படத்துக்கு இல்லாத முதல் நாள் வசூலாகும். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் முதல்நாளில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகநாயகன் கமல்ஹசன் பிறந்தநாள்....