Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன்! – ஓபனாக சொன்ன அக்ஷய் குமார்

Advertiesment
Cinema
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:00 IST)
மேன் வெர்சஸ் வைல்ட் புகழ் பியர் க்ரில்ஸுடன் லைவ் சாட்டில் பேசிய அக்‌ஷய் குமார் தான் தினமும் பசு கோமியம் குடிப்பதாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திரைப்பட நடிகரான அக்‌ஷய் குமார் தனது அடுத்த படமான பெல்பாட்டம் ஷூட்டிங்கிற்காக ஸ்காட்லேண்ட் சென்றுள்ளார். அங்கு அவருடன் ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்டவர்களும் சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரிட்டிஷ் அட்வென்சரரும், டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் மூலம் புகழ்பெற்றவரான பியர் க்ரில்ஸுடன் இன்ஸ்டாகிராம் லைவில் அக்‌ஷய் குமார், ஹூமா குரேஷி ஆகியோர் சாட் செய்துள்ளனர். அப்போது காடுகளில் கிடைக்கும் பூச்சிகளை, பொருட்களை உண்டு வாழ்வது குறித்து ஹூமா குரேஷி கேட்டபோது அக்‌ஷய் குமார் தான் தினமும் சில மருத்துவ காரணங்களுக்காக மாட்டு கோமியத்தை பருகி வருவதாக அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

இந்த செய்தி வைரலான நிலையில் கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளனவா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பலர் அக்‌ஷய் குமாரை கிண்டல் செய்து பதிவிட்டு வரும் நிலையில், ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ரியா முன்ஜாமீன் மனு: மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!