நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது
ஜெயம்ரவி நடித்த பூலோகம் என்ற திரைப்படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்திற்கு அகிலன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஜெயம்ரவியின் இருபத்தி எட்டாவது படமாக அமைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன