மீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா! கிடப்பில் போடப்பட்ட அண்ணாத்த?

வெள்ளி, 27 மார்ச் 2020 (10:14 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "அண்ணாத்த" படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே படம் குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகாது.  கடைசி நேரத்தில் அஜித்தின் "விவேகம்" படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்  அவசர அவசரமாக செய்தது போல் இந்த படத்தில் செய்யக்கூடாது என்பதில் சிவா நோக்கத்துடன் இருந்து வருகிறார்.

எனவே ரிலீஸ் தேதி எவ்வளவு காலதாமதமானாலும் படத்தின் வேலைகளை சிறப்பாக செய்து தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறாராம். இதனால் இப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீசாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அப்படி தீபாவளி தினத்தில் வெளியானால் அஜித்தின் வலிமை படத்துடன் மோதும். ஏனென்றால், வலிமை படத்தையும் இயக்குனர் எச். வினோத் தீபாவளி தினத்தில் வெளியிட மும்முரமாக இருந்து வருகிறார்.

இதற்கு முன்னர் பொங்கல் தினத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் , பேட்டஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டது. இதில் குடும்ப பாங்கான , பாசம் கலந்த கமர்சியல் படமான விஸ்வாசம் வெற்றி பெற்றது குரறிப்பிடத்தக்கது.  அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து படமியக்க திட்டமிட்டுள்ளராம் சிறுத்தை சிவா என்பது கூடுதல் தகவல்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அறிவு இல்ல...? ஒரு தடவை சொன்னா புரியாதா உங்களுக்கெல்லாம்... மானஸ்வியின் வைரல் வீடியோ!