Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் ''விடாமுயற்சி'' பட புதிய அப்டேட்- ரசிகர்கள் மகிழ்ச்சி

அஜித்தின் ''விடாமுயற்சி'' பட புதிய அப்டேட்- ரசிகர்கள் மகிழ்ச்சி
, புதன், 12 ஜூலை 2023 (20:07 IST)
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர்  அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நடிகர் அஜித் தன்  62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். சமீபத்தில் பைக் ரைடிங் சென்ற அஜித்தின் புகைப்படம் வைரலான நிலையில், இப்படத்திற்கான ஃபிட்டான தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே அஜித் விடாமுயற்சி படத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில்,  விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் பற்றிய தகவலை இயக்குநர் மகிழ்திருமேனி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 3  ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் உடன் இணையும் ஷங்கர்- ''முதல்வன்'' பட பாணியின் புதிய படம்!