Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''அஜித்62'' படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

''அஜித்62'' படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!
, வியாழன், 9 பிப்ரவரி 2023 (23:30 IST)
அஜித்62 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில், வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்துள்ளது.

இப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அஜித் நடிப்பில் அஜித்62 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் அஜித்62 படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத்திற்குப் பதிலாக  சந்தோஷ்  நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த தகவல் உறுதியானால், அஜித்- சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமிது ஆகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானி- கீர்த்தி சுரேஷின் ''தரசா ''பட புதிய அப்டேட்!