Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே இடத்தில் அஜித் & விஜய் படங்களின் ஷூட்டிங்… எங்கு தெரியுமா?

ஒரே இடத்தில் அஜித் & விஜய் படங்களின் ஷூட்டிங்…  எங்கு தெரியுமா?
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:48 IST)
அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘அஜித் 61’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விசாகப் பட்டணத்தில் நடக்க உள்ளது. இதற்காக படக்குழு அங்கு முற்றுகை இட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பும் தற்போது விசாகப் பட்டணத்தில்தான் நடக்க உள்ளதாம். முன்பு இதுபோல விஜய்யின் வேலாயுதம் மற்றும் அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த போது இருவரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனி, ரித்திகா நடிக்கும் கொலை… வித்தியாசமான டிரைலர் வெளியீடு