ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ரங்கூன்.
படத்தின் முதல் நாள் ஓப்பனிங் சுமாராக இருந்தாலும், படத்திற்கு பின்வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ரங்கூன் படத்தில் கௌதம் கார்த்திக் அஜித் ரசிகராக நடித்துள்ளார். மேலும், அஜித்துக்கு கட் அவுட் வைப்பது போல காட்சிகளும் இருக்கின்றன.
அஜித்துக்கு மட்டும் கட் அவுட்டா என விஜய்க்கு கட் அவுட் வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெருகின்றன.
அப்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு மோதல் வருவது போலவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.