சிவ நடிகருக்கும், அவர் நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குநருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சிவ நடிகர், உச்ச நட்சத்திரத்தின் படத் தலைப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியானது. போஸ்டர் வெளியான அரை மணி நேரத்திலேயே இந்தப் படத்தின் காப்பி தான் அது என்று ஆதாரத்துடன் அலறவிட்டனர் நெட்டிசன்கள். இதனால், அப்செட்டில் உள்ளார் சிவ நடிகர்.
காரணம், மேனஜரை பினாமியாக்கி, சொந்த செலவில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார் சிவ நடிகர். ஜோடியாக 4 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் பெரிய நம்பர் நடிகை, மலையாளத்தின் முன்னணி நடிகர் வில்லன் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வருகிறார் நடிகர்.
இந்நிலையில், போஸ்டர் காப்பி என்று செய்திகள் வெளியானதால், இயக்குநருக்கும், சிவ நடிகருக்கும் இடையில் மனஸ்தாபமாம். எனவே, ‘படத்தில் ஏதாவது காப்பி அடித்திருந்தால், அதையெல்லாம் சரிசெய்துவிட்டு வாருங்கள்’ என்று சொல்லி, புதுப் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிவிட்டாராம் சிவ நடிகர். இதனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்காம்.