ரிலீஸுக்கு முன்பே 250 கோடி ரூபாய் வியாபாரம்… மாஸ் காட்டும் விடாமுயற்சி!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:45 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

முதல் கட்ட ஷூட்டிங் ஒரு மாதத்துக்கு மேல் நடந்த நிலையில் இடையில் சில வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு படக்குழு சென்னைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் படக்குழு அஜர்பைஜானுக்கு சென்று ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. இப்போது படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா விலகி, அவருக்கு பதிலாக ஓம்பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments