Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் அஜித் எடுத்த அதிரடி முடிவு… எடை குறைய இதுதான் காரணம்!

Advertiesment
ஒரே நாளில் அஜித் எடுத்த அதிரடி முடிவு… எடை குறைய இதுதான் காரணம்!
, வியாழன், 14 டிசம்பர் 2023 (07:15 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது

இந்நிலையில் அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்நிலையில் ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது மீண்டும் அஜர்பைஜானுக்கு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் உடல் எடை குறைந்து ட்ரிம்மாக காணப்படுகிறார். அதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அஜித் தற்போது அசைவ உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக விட்டுவிட்டாராம். அதனால்தான் குண்டாக காணப்பட்ட அவர் சமீபகால புகைப்படங்களில் ஒல்லியாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசோக் செல்வன் நடித்த சபாநாயகன் படத்தின் ரிலீஸில் கடைசி நேர மாற்றம்!