Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரும் ஆனா வராது… தீபாவளி ரிலீஸில் புதிர் போடும் விடாமுயற்சி!

வரும் ஆனா வராது… தீபாவளி ரிலீஸில் புதிர் போடும் விடாமுயற்சி!

vinoth

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:37 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதுவரை எடுக்கப்பட்ட மொத்த படமும் எடிட் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ராட்சசன்’ பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!