Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துக்கு பிடிக்காத காட்சிகளை ரிஷுட் செய்யப் போகிறாரா மகிழ் திருமேனி!

அஜித்துக்கு பிடிக்காத காட்சிகளை ரிஷுட் செய்யப் போகிறாரா மகிழ் திருமேனி!

vinoth

, செவ்வாய், 4 ஜூன் 2024 (07:37 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நினைத்தபடி ஷூட்டிங் முடியாததால் இப்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்களும் விடாமுயற்சி படத்தைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் விடாமுயற்சி படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகளில் சில அஜித்துக்கு முழு திருப்தியை தரவில்லை என்றும் அதை ரி ஷூட் செய்யவேண்டும் எனவும் அவர் சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதை ஏற்றுக்கொண்ட மகிழ் திருமேனியும் விரைவில் அந்த காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு..!