Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சன் பிக்சர்ஸ்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சன் பிக்சர்ஸ்?

vinoth

, செவ்வாய், 28 மே 2024 (08:43 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றொரு தயாரிப்பாளராக இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஓடிடி தவிர்த்த அனைத்து உரிமைகளையும் வாங்கிக்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ள வெங்கட்பிரபு!