Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று துணிவு படத்தின் அப்டேட் வெளியாகுமா? காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

இன்று துணிவு படத்தின் அப்டேட் வெளியாகுமா? காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!
, திங்கள், 24 அக்டோபர் 2022 (14:59 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

அஜித்தின் 61 ஆவது படமான துணிவு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துள்ளது. தாய்லாந்து படப்பிடிப்பை முடித்து வந்த படக்குழு தற்போது சென்னையில் சில பேட்ச் காட்சிகளை படமாக்கி வருகிறது. துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அஜித் தனது 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் அஜித் சுமார் 2 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த இரண்டு வருடத்தில் அவர் உலகம் முழுவதும் தனது இரு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாராம். சமீபகாலமாகவே அஜித் அதிகளவு பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிவு படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கான தயாரிப்புகளை எதுவும் படக்குழு செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசிய ஜிபி.முத்து - பிரபல நடிகர் டுவீட்