Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் பிறந்தநாளில் ரி ரிலீஸான மூன்று சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள்!

அஜித் பிறந்தநாளில் ரி ரிலீஸான மூன்று சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள்!

vinoth

, வியாழன், 2 மே 2024 (07:54 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

இந்நிலையில் நேற்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தீனா மற்றும் பில்லா ஆகிய இரு படங்களும் தமிழகத்தில் ரி ரிலீஸ் ஆகின. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இவ்விரு படங்களையும் பார்க்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இதுதவிர அஜித்தின் மங்காத்தா திரைப்படம் இந்தியாவில் இல்லாமல் கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் ரி ரிலீஸாகி அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரே நாளில் மூன்று அஜித் படங்கள் ரி ரிலீஸானது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பின்னணி பாடகி காலமானார்.. தமிழ் திரையுலகினர் இரங்கல்..!