Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடாமுயற்சி வேலைக்கு ஆகாது… குட் பேட் அக்லி படத்துக்கு செல்லும் அஜித்!

விடாமுயற்சி வேலைக்கு ஆகாது… குட் பேட் அக்லி படத்துக்கு செல்லும் அஜித்!

vinoth

, செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:11 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகும் சூழல் நிலவுவதால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  ஜூன் மாதம் தொடங்க இருந்த குட் பேட் அக்லி ஷூட்டிங்கை மே 10 ஆம் தேதியே தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ப்ரைஸாக வந்த தனுஷின் குபேரா பட அப்டேட்!