Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று நள்ளிரவு வெளியாகும் அஜித் நடித்த விவேகம் டீஸர்!

இன்று நள்ளிரவு வெளியாகும் அஜித் நடித்த விவேகம் டீஸர்!

இன்று நள்ளிரவு வெளியாகும் அஜித் நடித்த விவேகம் டீஸர்!
, புதன், 10 மே 2017 (16:18 IST)
நடிகர் அஜித் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் மூன்றாவது படமான விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது.


 
 
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய், அப்புக்குட்டி நடித்துவரும் விவேகம் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தாயரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அஜித் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், அன்று வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி விவேகம் டீஸர் வெளியாகும் என ட்விட்டரில் படத்தின் இயக்குநர் சிவா கூறியிருந்தார். அதன்படி இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு விவேகம் டீஸர் வெளியாக உள்ளது. 57 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீஸரில் அஜித் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் உள்ளதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லாள தேவனின் மனைவி யார்? - ராஜமௌலி அளித்த பதில்