பாகுபலி படத்தில் வில்லன் கதாபாத்திரமான பல்லாள தேவனின் மனைவி பற்றி ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார்.
பாகுபலி முதல் பாகத்தில் பல்லாள தேவன் கதாபாத்திரமான ராணாவிற்கு ஒரு மகன் இருப்பது போலவும், அவரை, பாகுபலியின் மகன் கதாபாத்திரமான பிரபாஸ் தலையை வெட்டி கொலை செய்வது போலவும் காட்டியிருப்பார்கள்.
சமீபத்தில் வெளியான இரண்டாம் பாகத்தில், பல்லாள தேவன் அனுஷ்காவை விரும்புவது போலவும், ஆனால், அனுஷ்கா பிரபாஸை திருமணம் செய்து கொள்வது போலவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால், பல்லாள தேவன் மனைவி தொடர்பாக எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.
எனவே, இதுபற்றி பற்றி விளக்கம் அளித்துள்ள ராஜமௌலி “பல்லாள் தேவன், தேவசேனாவை காதலித்தார். ஆனால், அவரின் காதல் கை கூடவில்லை. அதனால், அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்” என கூறியுள்ளார்.
இதன் மூலம் ராணாவிற்கு இப்படத்தில் மனைவி கதாபாத்திரமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.