Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-ன் ‘வலிமை ’போஸ்டர் நிகழ்த்திய சாதனை !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (22:37 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தின் மோஸன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் வலிமை போஸ்டர் சாதனை படைத்துள்ளது.
 

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 11 ஆம் தேதி வெளியானது.  இரண்டு வருடம் கழித்து அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் வலிமை பட போஸ்டர் பிரமாண்டமாக இருந்தது.

ஒரு நிமிடம் 23 விநாடிகள் ஓடும் இந்த போஸ்டரை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
இரண்டு நாட்களில் இதுவரை 10  மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். சுமார் 7  லட்சத்திற்கு இந்த மோசன் போஸ்டருக்கு லைக்குகள் கிடைத்துள்ளது. இது இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட மோஸன் போஸ்டர் என்ற சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்துல 3 அஜித்.. பில்டப் இல்லாமலே பறக்கும் விசில்! எப்படி இருக்கு ‘விடாமுயற்சி’? | Vidaamuyarchi Movie Review

500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான காந்தாரா படத்தின் போர்க்களக் காட்சி..!

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்… விமர்சனத்துக்கு உள்ளான சமந்தாவின் புகைப்படம்!

படம் ரிலீஸாகும்போதும் ரேஸில் பிஸி! போர்ச்சுக்கலில் அஜித்குமார் கார் ரேஸ்!

வெளிநாட்டில் ரிலீஸ் ஆனது ‘விடாமுயற்சி’.. குவியும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments