Publish Date: Tue, 13 Jul 2021 (21:23 IST)
Updated Date: Tue, 13 Jul 2021 (21:28 IST)
ஆதார் அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை இனிமேல் செல்போன் மெசேஜ் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை நடைமுறைக்கு வந்த பின் அதிலுள்ள பிழைகளைத் திருத்தவும் மாற்றம் செய்யவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளதாவது:
இனிமேல் ஆதாரில் தேவையான மாற்றங்கள், பிழை திருத்தம் உள்ளிட்ட சேவைகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிமையான மாற்றத்தினால் நேரமும் , இதற்காக வேலைக்கு லீவு எடுக்க வேண்டிய சூழலும் குறையும் எனக் கூறப்படுகிறது.
sinoj
Publish Date: Tue, 13 Jul 2021 (21:23 IST)
Updated Date: Tue, 13 Jul 2021 (21:28 IST)