அஜித் படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.. ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் வருத்தம்:

Siva
புதன், 8 அக்டோபர் 2025 (17:50 IST)
தமிழ் சினிமாவின் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சிலர், நடிகர் அஜித் சார் தனது படங்களின் படப்பிடிப்பை அடிக்கடி ஹைதராபாத்தில் வைப்பதால், சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தகவல் படி, மழைக்காலத்தை கருத்தில் கொண்டும், அமைதியான சூழலை விரும்புவதாலும், படக்குழு படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தைத் தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், நடிகர் அஜித் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம்: அவர் நடிக்கும் படத்தை எடுக்கும்போது, அந்த நிறுவனம் வேறு எந்த படத்தையும் தயாரிக்கக் கூடாது. 
 
தனது படத்திற்குக் குறைந்தபட்சம் 150 நாட்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவதால், ரோமியோ பிக்சர்ஸ் தனது முந்தைய படங்களின் விநியோக உரிமையைக் கூட ரத்து செய்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அப்படித் தலைப்பு வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் –மாரி செல்வராஜ் விளக்கம்!

அரோரா பின்னாடியே சுற்றிய துஷார்! வீட்டு தல பதவியை பறித்த பிக்பாஸ்! Biggboss Season 9

ஷேக்ஸ்பியரிடமிருந்துதான் ‘ரெட்ட தல’ படத்தின் கதையை எடுத்தேன் – இயக்குனர் பகிர்வு!

குட் பேட் அக்லி பாடல்களை முறைப்படிதான் வாங்கினோம்… பிரச்சனை குறித்து பேசிய தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments