Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?... சன் டிவி பிரபலம் அளித்த பதில்!

Advertiesment
அஜித் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?... சன் டிவி பிரபலம் அளித்த பதில்!

vinoth

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:55 IST)
சில ஆண்டுகளாகவே நடிகர் யோகிபாபுவை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒரு நடிகர் “என்னைத் தொடாதே” என சொன்னதாகவும், அந்த நடிகர் யார் என்பது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.இந்த  பிரச்சனையை தொடங்கி வைத்ததே வலைப்பேச்சு சேனலைச் சேர்ந்த அந்தனனும் பிஸ்மியும்தான்.

இந்நிலையில் யோகி பாபு வலைப்பேச்சு சேனல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த பிஸ்மி “யோகி பாபு சொல்வது பொய்யான ஒன்று. அதற்கு ஆதாரம் இருந்தால் அவர் நிரூபிக்கட்டும். அதே போல யோகி பாபுவை ஒரு ஹீரோ என்னைத் தொடாதெ என்று சொன்னதாக நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவலை சொல்லியிருந்தோம். அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை, அஜித்தான். அதுமட்டுமில்லை அந்த தகவலை எங்களிடம் பகிர்ந்ததே யோகிபாபுதான்” எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் அப்படி தீண்டாமையை யாரிடம் கடைபிடிப்பவர் இல்லை என்று சன் டிவியின் முன்னாள் தொகுப்பாளர் விஜய் சாரதி கூறியுள்ளார். 2008 ஆம் ஆண்டு அவர் அஜித்தை ஒரு நேர்காணல் செய்திருந்தோம். அந்த ஷூட்டுக்கு வந்த போது “அரங்கில் இருந்த அனைவருக்கும் கைகொடுத்து வரவேற்ற பின்னர்தான் நேர்காணலைத் தொடங்கினார்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தாரா அஜித்… பிரபல பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!