Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிக்க என்னிடம் ஒரு திரைக்கதை இருக்கு.. அது அவர்களுக்கும் தெரியும் – மனம் திறந்த வெங்கட்பிரபு!

அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிக்க என்னிடம் ஒரு திரைக்கதை இருக்கு.. அது அவர்களுக்கும் தெரியும் – மனம் திறந்த வெங்கட்பிரபு!

vinoth

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:09 IST)
சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட்பிரபு பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “என்னிடம் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் சேர்த்து நடிக்கவைக்க ஒரு திரைக்கதை உள்ளது. அது அவர்களுக்கும் தெரியும். ஆனால் அது குறித்து அவர்கள் என்னை நினைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் லால் சலாம் ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய வதந்தி!