Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் அடுத்த படத்திட்டம் இதுதானாம்! போனி கபூருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Advertiesment
அஜித்தின் அடுத்த படத்திட்டம் இதுதானாம்! போனி கபூருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
, திங்கள், 14 ஜூன் 2021 (16:30 IST)
அஜித் நடிப்பில் இப்போது வலிமை படத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை திட்டமிட்டது போல எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய முடியாததால் போனி கபூருக்கு வட்டியாக பல கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதனால் எந்த அளவுக்கு அவரால் லாபம் பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது அஜித் தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் அவருக்கே வழங்கியுள்ளாராம். மேலும் அடுத்த படத்தை குறைந்த செலவில் குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்து வெளியிடும் விதமாக கதை இருக்கும் படி பார்த்துக் கொள்ள சொல்லியுள்ளாராம். இதனால் அஜித்தின் அடுத்த படம் விரைவில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதிபுருஷ் படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் காட்சிகளா? வியப்பில் ஆழ்த்தும் படக்குழு!