Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் கையில் இருக்கும் தழும்பு – இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (09:55 IST)
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தலாம் என படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளது டெல்லி அரசு. இதனால் அந்த காட்சிகளை அப்படியே வைத்துவிட்டு அஜித் இல்லாத காட்சிகளை இப்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படமாக்கி வருகிறாராம் ஹெச் வினோத்.

இந்நிலையில் இப்போது இணையத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித்தின் இடதுகையில் காயத்தழும்பு காணப்பட அதுகுறித்து ரசிகர்கள் சோகமாகியுள்ளனர். இந்த காயம் வலிமைப் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்டதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments