இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பதும் அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இந்தியக் கொடியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அங்குள்ள அஜித் ரசிகர்கள் என இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ள தல அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது