Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரிலீஸீல் இருந்து பின்வாங்கிய ‘குட் பேட் அக்லி’.. புதிய ரிலீஸ் தேதி இதுதானா?

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (09:22 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் முதலில் பொங்கலுக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பொங்கல் ரிலீஸீல் இருந்து பின்வாங்கி மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments