வாரணம் ஆயிரம் படத்தில் நான் உதவி இயக்குனர்… சூர்யாவை வியந்து பாராட்டிய சந்தீப் கிஷன்!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (07:31 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

படத்தின் ப்ரமோஷனுக்காக சூர்யா இந்தியா முழுவதும் சென்று வருகிறார். இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கங்குவா படக்குழுவோடு நடிகர் சந்தீப் கிஷன் கலந்துகொண்டார். சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் “ என்னுடைய முதல் ஹீரோ சூர்யா அண்ணன். நான் வாரணம் ஆயிரம் படத்தில் 16 ஆவது உதவி இயக்குனர். அப்போதில் இருந்து இப்போது வரை என்னை அன்பாக நடத்தி வருகிறார் சூர்யா சார். எப்போதும் அன்பு, பணிவு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் அவருக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments