அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.70 கோடி நஷ்டமா?

Siva
புதன், 17 செப்டம்பர் 2025 (19:01 IST)
பிரபல இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம், இளையராஜாவின் பாடல்கள் முறையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால், நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ.70 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் சில பாடல்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான உரிமை முறையாக பெறப்படவில்லை என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து உடனடியாக அந்த படம் நீக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடியை சமாளிக்க, தயாரிப்பு நிறுவனம், நடிகர் அஜித்துடன் பேசி அடுத்த படம் தயாரிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என அவர்கள் நம்புவதாகவும் தெரிகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments