ஃபேக் ஐடி டிவீட்டை நம்பி… குத்த வைத்த அஜித் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:52 IST)
வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டுக்கு வரும் என்று நம்பி அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தை பற்றிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளிவரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று அஜித்தின் மேலாளரும் வலிமை படத்தின் மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா பெயரில் உள்ள போலியான டிவிட்டர் கணக்கில் இருந்து நாளை வலிமை அப்டேட் வரும் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி அஜித் ரசிகர்கள் டிவிட்டரே கதியென்று கிடக்க அப்புறம்தான் தெரிந்ததாம் அது ஃபேக் ஐடி என்று.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments