Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் முழுவதும் ஹோட்டல் ஆரம்பிக்கின்றாரா அஜித்? பரபரப்பு தகவல்கள்!

Ajith
, செவ்வாய், 10 மே 2022 (17:43 IST)
தல அஜித் தமிழகம் முழுவதும் ஹோட்டல் ஆரம்பிக்கும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பதும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது என்பதும் அனிருத் இந்த படத்தில் இசையமைக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் அஜீத் ஒரு தொழிலதிபராக நடிக்க இருப்பதாகவும் ஆரம்பத்தில் சாதாரண சிறிய ஓட்டல் ஆரம்பித்து தனது உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி தமிழகம் முழுவதும் ஓட்டல் கிளைகள் ஆரம்பித்திருக்கும் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த கேரக்டரில் இதுவரை அஜீத் நடித்ததே இல்லை என்றும் அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு முழு திருப்தி அடையும் வகையில் இருக்கும் என்றும் விக்னேஷ் சிவன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தளபதி 66’ படத்தில் இணைந்த மேலும் 3 பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!